Jul 12, 2025 - 04:30 PM -
0
பிரித்தானிய அரசாங்கத்தால் நாட்டிற்கு வழங்கியுள்ள வரிச் சலுகைகளை திறம்படப் பயன்படுத்த, தரவு அடிப்படையிலான திட்டத்துடன் அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த வரிச் சலுகை மூலம் நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டிய துறைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முன்னதாக, இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 7 சதவீத வரி விகிதம் விதிக்கப்பட்ட நிலையில், புதிய சீர்திருத்தங்கள் மூலம் அதை முற்றிலுமாக குறைக்க அந்நாடு நடவடிக்கை எடுத்துள்ளது.
வரிச் சலுகைகளை வழங்கிய நாடுகளிலிருந்து ஆடைகள், உணவு மற்றும் மின்னணு உபகரணங்கள் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் பொருட்களை உள்ளடக்கும் வகையில் இந்தப் புதிய நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய வணிக மற்றும் வர்த்தகத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் ஊடாக ஆடைகள் உட்பட அதிகமான இலங்கைப் பொருட்களை பிரித்தானியாவிற்கு வரியின்றி ஏற்றுமதி செய்ய முடியும்.
அமெரிக்கா வரிகளை விதித்து மூன்றாம் உலக நாடுகளுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் நேரத்தில், பிரித்தானியா, இலங்கைக்கு வரியின்றி ஆடை மற்றும் விவசாய ஏற்றுமதிக்கான வாய்ப்பை வழங்குவது விசேட சலுகையாகும்.
குறிப்பாக, எமது மொத்த ஏற்றுமதியில் 7% ஐ நாங்கள் பிரித்தானியாவிற்கு ஏற்றுமதி செய்கிறோம்.
இந்தத் தொகையை இன்னும் கொஞ்சம் அதிகரிப்பது எப்படி?, எந்தெந்த துறைகளில் எமது ஏற்றுமதியை ஊக்குவிக்க முடியும் என்பதை நாம் ஆராய வேண்டும். தரவுகளின் அடிப்படையில் ஒரு நல்ல திட்டத்தின் கீழ் அதிகபட்ச பலத்தைப் பெற வேண்டும்.
எதிர்காலத்தில், அமெரிக்காவால் ஆடைத் தொழிற்துறைக்கு விதித்துள்ள தீர்வை வரியால் ஏற்படும் தாக்கத்தை எமக்கு பிரித்தானியாவின் ஊடாக குறைப்பது மட்டுமல்லாமல், ஊக்கமளிக்கும் சூழ்நிலையை உருவாக்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்த நேரத்தில் பிரித்தானியாவிற்கு ஆடைகள் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.