Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
பேச்சுக்கள் மற்றும் அறிக்கைகளை விட நாட்டுக்கு செயல்களே முக்கியம்

Jul 12, 2025 - 10:25 PM

பேச்சுக்கள் மற்றும் அறிக்கைகளை விட நாட்டுக்கு செயல்களே முக்கியம்
Mobitel Inner 1278

தர்க்க ரீதியிலமைந்த தேசிய கொள்கைகள், தனியார் துறை தலைமைத்துவம் மற்றும் நீண்டகால திட்டமிடல் என்பன நாட்டுக்குத் தேவையாக காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

RICS Sri Lanka Industry Dialogue in Colombo நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதாரம் தொடர்பிலான தனது தொலைநோக்குப் பார்வையை எதிர்க்கட்சித் தலைவர் இங்கு முன்வைத்தார். 

a national circular built environment framework, affordable housing for the middle class, smart urban planning, revitalizing the construction sector, and green public procurement ஆகிய இந்த ஐந்து அம்சங்களை நோக்கி நாம் நகர வேண்டியதன் முன்னுரிமை முக்கியத்துவத்தை என அவர் இங்கு எடுத்துக்காட்டினார். 

கொள்கைகள் மற்றும் பேச்சுக்களை விட செயலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், பேச்சுக்களை விட உண்மையான செயலாக்கத்துக்கு அழைப்பு விடுத்தார். 

அவ்வாறே வரையறுத்த அரச நிதி இருப்பை அங்கீகரித்து கொண்டு, நகர்ப்புற இடம் சீர்திருத்தம் மற்றும் முதலீட்டாளர் வசதி போன்ற விநியோக பக்கம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் இங்கு அழைப்பு விடுத்தார். 

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்த அவர், ஊழலைக் கட்டுப்படுத்த முழுமையான டிஜிட்டல் மயமாக்கலுக்கும் அழைப்பு விடுத்தார். 

அவசர சீர்திருத்தங்கள் இல்லாவிட்டால் 2028 ஆம் ஆண்டில் ஏற்படப் போகும் பொருளாதார நெருக்கடி குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு எச்சரிக்கை விடுத்தார். குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நியாயமானதொரு, IMF இணக்கப்பாட்டுக் கொள்கையை எட்டிக்கொள்ள தாம் முன்நிற்போம் என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

Mobitel 1278