உலகம்
இம்ரான்கான் யூடியூப் செனலுக்கு தடை விதித்த நீதிமன்றம்!

Jul 13, 2025 - 06:32 AM -

0

இம்ரான்கான் யூடியூப் செனலுக்கு தடை விதித்த நீதிமன்றம்!

பாகிஸ்தானில் சமீப காலமாக அரசாங்கத்தின் கொள்கைகளை சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, அரசு அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் பதிவுகளை பதிவிட்டனர். 

இதனால் அரசின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டு வந்தது. எனவே அந்த தளங்களை தடைசெய்ய வேண்டும் என நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

இதனையடுத்து முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பத்திரிகையாளர்கள் உள்பட 27 பேரின் யூடியூப் செனல்களுக்கு இடைக்கால தடை விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதனை மீறி அரசினை விமர்சித்தால் அந்த யூடியூப் செனல்கள் நிரந்தரமாக முடக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 21-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

யூ டியூப் செனல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடையால் மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. இது கருத்து சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் என அந்நாட்டின் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். 

எனவே இதனை எதிர்த்து அவர்கள் உயர் நீதிமன்றில் மேல் முறையீடு செய்துள்ளனர். 

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் யூடியூப் செனல் முடக்கப்பட்ட விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05