செய்திகள்
எல்லை தாண்டிய மேலும் 07 இந்திய மீனவர்கள் கைது

Jul 13, 2025 - 07:06 AM -

0

எல்லை தாண்டிய மேலும் 07 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். 

இதன்போது காங்கேசன்துறை வடமேற்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த ஏழு மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 

கைதான மீனவர்கள் படகுடன் கங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் ஏழு பேரும் படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05