செய்திகள்
ஜூன் மாதம் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் 600 மில்லியன் டொலரை தாண்டியது

Jul 13, 2025 - 08:36 AM -

0

ஜூன் மாதம் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் 600 மில்லியன் டொலரை தாண்டியது

2025 ஜூன் மாதத்தில் இலங்கைக்கு 635.7 மில்லியன் அமெரிக்க டொலர் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் பெறப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 22% அதிகரிப்பாகும். 

2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் மொத்த மதிப்பு 3.7 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 18.9% அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கிறது. 

2024 ஆம் ஆண்டிற்கான மொத்த புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் 6.57 பில்லியன் அமெரிக்க டொலராகும். 

அதிகாரபூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை 312,836 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Comments
0

MOST READ
01
02
03
04
05