Jul 13, 2025 - 10:10 AM -
0
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1,700 ரூபா சம்பள அதிகரிப்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஊடாக வெகுவிரைவில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
நேற்று (12) கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெருந்தோட்ட சம்பள விடயம் தொடர்பாக எவ்வளவு காலங்கள் எடுக்குமென்பது குறித்து எங்களால் கூறமுடியாது. இது தொடர்பாக உள்ளக ரீதியாக பல பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறோம் அரசாங்கம் என்ற ரீதியில் இதற்கான தீர்வு வழங்கப்படும் .
கடந்த அரசாங்கத்தில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாகவே ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுதேர்தல் ஆகியவற்றில் நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆனையினை வழங்கியிருந்தார்கள். அதன் அடிப்படையில் உள்ளூராட்சி சபை தேர்தலில் பல சபைகளில் தேசிய மக்கள் சக்தி பெருபான்மையினை பெற்றிருந்தது. இந்த தேர்தலை பொருத்தவரையில் சிறிய கட்சிகளும் சுயேட்சை கட்சிகளும் இனைந்து ஆட்சியமைக்க முயற்சி செய்தார்கள்.
நல்ல விடயங்களுக்கு எம்மோடு இனைந்து கொள்ளுமாறு தான் நாங்கள் அழைப்பு விடுத்திருந்தோம். பிரதேச சபையின் ஊடாக மக்களுக்கு சேவையினை செய்யவேண்டுமென்று தான் இனைந்து ஆட்சியமைத்தோமே தவிர எந்த கட்சிகளோடும் டில் எதுவும் கிடையாது.
பல அரசியல்வாதிகளும், பல அரச அதிகாரிகளும் சிறைவாசம் அனுபவித்து வருவதாக தற்போது பேசப்பட்டு வருகிறது.
மலையகத்தில் இடம்பெற்ற ஊழல்கள் விசாரிக்கப்படுமா என்றும் விமர்சனங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே குற்றம் செய்யதவர்கள் யாராக இருந்தாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தண்டனை உண்டு.
அரசியல் ரீதியாகவோ, கட்சிகள் ரீதியாகவோ மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் எதுவும் கிடையாது சபைளில் தலைவர் மற்றும் உபதலைவர்களை தெரிவு செய்ய நடைமுறைகளை மாத்திரமே பின்பற்றினோம்.
சில விசாரணைகளை மேற்கொள்வதற்கு சில காலங்கள் செல்லும் கல்வி அதிகாரிகள் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆகவே இந்த சிறழிந்து சென்று கொண்டு இருக்கின்ற நிறுவணங்கள் வெகுவிரைவில் சரிசெய்யப்படும்.
கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக யார் செயற்பட்டாலும் அவர்களுக்கு எதிராக கட்டாயம் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அமெரிக்காவினால் இதற்கு முன்பு விதிக்கப்பட்ட 44 சதவீதமான வரி ராஜதந்திரிகள் ஊடாக குறைக்கப்பட்டு தற்போது 30 வீதமாக காணப்படுகிறது இன்னும் நாங்கள் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு இலங்கை நாட்டுக்கு ஒரு சாதமான வரி வீதத்தினை கொண்டுவர நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.
--