செய்திகள்
வட கடலில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா சிக்கியது

Jul 13, 2025 - 11:42 AM -

0

வட கடலில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா சிக்கியது

யாழ்ப்பாணம், எலுவை தீவுக்கு அப்பால் உள்ள புதுடு பகுதியில் இலங்கை கடற்படை நேற்று (12) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகளவு பெறுமதிக் கொண்ட சுமார் 38 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. 

யாழ்ப்பாணம், எலுவை தீவுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில், வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் எலார நிறுவனத்தின் கடற்படையினர் நடத்திய இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த கடல் பகுதியில் மிதக்கும் சந்தேகத்திற்கிடமான பையொன்று (01) கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. 

அந்தப் பையில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 38 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. 

கடற்படையின் நடவடிக்கைகளின் மூலம் கரைக்கு கொண்டு வர முடியாததால், கடத்தல்காரர்கள் கேரள கஞ்சா கையிருப்பை எலுவை கடலில் கைவிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதுடன், பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா கையிருப்பின் பெறுமதி 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என நம்பப்படுகிறது. 

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையானது, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05