Jul 13, 2025 - 12:08 PM -
0
றாகமை படுவத்த பகுதியில் 'ஆர்மி உபுல்' என்பவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய மேலும் ஒருவரை களனி குற்ற விசாரணை பணியகம் கைது செய்துள்ளது.
கடந்த 3ஆம் திகதி நடந்த கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, சந்தேகநபர் 50 கிராம் 600 மில்லி கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
30 வயதான சந்தேகநபர் றாகமை படுவத்த பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
கடந்த 3ஆம் திகதி முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர், 'ஆர்மி உபுல்' என்பவரை பிஸ்டல் வகை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் 8ஆம் திகதி களனி குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகளால் 9 கிலோ கிராம் ஹெராயின், 67 கிலோ கிராம் கேரள கஞ்சா, இரண்டு துப்பாக்கிகள் மற்றும் இராவைகளுடன் கைது செய்யப்பட்டனர்.

