Jul 13, 2025 - 12:36 PM -
0
கொகைன் வகை போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த மாதம் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து ஒரு கிராம் போதைப்பொருள் மற்றும் கவர்களை பறிமுதல் செய்தனர்.
மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதும் உறுதி செய்யப்பட்டிருந்தது.
அண்மையில் இந்த வழக்கு குறித்து பொலிஸார் தெரிவிக்கையில்,
இந்த வழக்கின் விசாரணைக்கு பிறகு மேலும் 10 வழக்குகள் போடப்பட்டன.
2023 ஆம் ஆண்டு முதலே நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருளைப் பயன்படுத்தி வந்ததும், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்திருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.