மலையகம்
வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானது

Jul 13, 2025 - 04:16 PM -

0

வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானது

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலையோற்றம், போதிய அளவு பொருட்கள் இறக்குமதி இல்லாமை மற்றும்  விவசாயிகளுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கத் தவறியதாலும், உள்ளூர் நெல் மற்றும் மரக்கறி  விவசாயிகள் விவசாயத் துறையை விட்டு விரைவாக வெளியேறி வருகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

 

ஹட்டனில் உள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

தற்போது ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானது என்பதை மக்கள் தெளிவாக தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள் காரணம் நாட்டு மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றத் தவறி வருகின்றனர்.

 

அத்துடன் நாட்டின் தேசிய பாதுகாப்பில் திருப்தி அடைய முடியாது உள்ளது, நாட்டில் பல்வேறு இடங்களில் நாளுக்கு நாள் கொலைகள் நடைபெற்று வருவதாகவும், முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது கூட, இந்த நாட்டில் பாதாள உலகத் தலைவர்கள் போதைப்பொருட்களை விற்றதாகவும், ஆனால் அத்தகைய கொலைகள் எதுவும் தொடர்ந்து நடக்கவில்லை என்றும் கூறினார்.

 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பல அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்திருந்தாலும், ஊழல் மற்றும் மோசடி தொடர்பாக அரசாங்கத்தில் இணைந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்கள் இதில் எனக்கு எங்கள் தோட்டத்தில் வாழும்  மக்களுக்கும் எந்த நம்பிக்கையும் இல்லை.

 

குறிப்பாக தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை எவ்வாறானது என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது, நாட்டை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தெரியாமல் அரசாங்கம் தற்போது தடுமாற்றமடைந்துள்ளது.

 

மேலும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் தோட்டத் துறை மக்களின் வருமானமும் ஆரோக்கியமும் குறைந்துள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் இதுவரை தோட்டத் தொழிலாளர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை இதனால் தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானது என்பதை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள் என தெரிவித்தார் .

--

Comments
0

MOST READ
01
02
03
04
05