Jul 13, 2025 - 05:31 PM -
0
ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனமான உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு World Intellectual Property Organization (WIPO) வழங்கும் 2025 ஆம் ஆண்டுக்கான “WIPO உலகளாவிய விருதுகள்” விழாவில் இலங்கையைச் சேர்ந்த கலாநிதி நதீஷா சந்திரசேன “சுற்றுச்சூழல் பிரிவு”க்கான விருதை வென்றுள்ளார்.
உலகிற்கு அறிமுகப்படுத்திய ஸ்மார்ட் வடிகால் அமைப்புக்காக (SMART DRAIN BY URBAN INVENTOR) அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது வழங்கும் விழா சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றது, மேலும் 95 நாடுகளைச் சேர்ந்த 780 நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்நிலையில், இலங்கையர் ஒருவர் இந்த விருதை வென்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

