Jul 13, 2025 - 11:59 PM -
0
விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர் முதலாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் கடந்த 23ஆம் திகதி முதல் லண்டனில் இடம்பெற்று வருகின்றன.
இன்றைய இறுதிப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர் (23), ஸ்பெயினை சேர்ந்த உலகின் நம்பர் 2 வீரரும், நடப்பு விம்பிள்டன் சாம்பியனுமான, கார்லோஸ் அல்காரஸ் (22) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
இதில் ஜானிக் சின்னர் 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கார்லோஸ் அல்காரஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.