Jul 14, 2025 - 07:16 AM -
0
இங்கிலாந்து நாட்டின் லண்டன் சவுத் எண்ட் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) சிறிய ரக விமானம் நெதர்லாந்துக்கு புறப்பட்டது.
இந்நிலையில், விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் தரையில் விழுந்து விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் விமானம் தீப்பற்றி எரிந்து வெடித்துச் சிதறியது.
தகவலறிந்த பொலிஸார் மற்றும் தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
விமானம் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து, அந்த விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது.