Jul 14, 2025 - 07:48 AM -
0
முகத்துவாரம், இப்பாவத்த சந்தி பகுதியில் கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நடத்திய சோதனையில், 20 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொழும்பு 12 பகுதியில் வசித்து வரும் 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையைத் தொடர்ந்து, கொழும்பு 13 இன் நிவ்வெம் சதுக்கப் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபருக்குச் சொந்தமான வீட்டை சோதனையிட்டனர்.
இதன்போது, 745 கிராம் ஐஸ் போதைப்பொருள், வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி, அதற்கான 5 ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு முகத்துவாரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
கைதான சந்தேகநபர் கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர்.
சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் உதவியாளர் என்பது தெரியவந்துள்ளது.
முகத்துவாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

