செய்திகள்
நாவின்னவில் பேருந்து விபத்து

Jul 14, 2025 - 08:26 AM -

0

நாவின்னவில் பேருந்து விபத்து

மஹரகம, நாவின்ன பகுதியில் இன்று (14) காலை 6 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். 

நாவின்ன பேருந்து நிறுத்தத்திலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த பேருந்து, மஹரகமவிலிருந்து கொழும்பு நோக்கி பிரதான வீதியில் பயணித்த மற்றொரு பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தற்போது விபத்துக்குள்ளான பேருந்து பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதோடு, மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05