வணிகம்
உலக இளைஞர் திறன் தினம் அனுஷ்டிப்பு - திறன் படைத்த இளைஞர்களினூடாக இலங்கைக்கு வலுவூட்டல்

Jul 14, 2025 - 09:14 AM -

0

உலக இளைஞர் திறன் தினம் அனுஷ்டிப்பு - திறன் படைத்த இளைஞர்களினூடாக இலங்கைக்கு வலுவூட்டல்

நாடொன்றின் அபிவிருத்தி, புத்தாக்கத்தை முன்னெடுத்துச் செல்வது, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் இளைஞர் திறன்கள் மிகவும் முக்கியமானவை. இளைஞர்களுக்கு சரியான திறன்களை வழங்குவதனூடாக, முழுமையான பொருளாதாரத்தில் அவர்களை பங்கேற்கச் செய்ய முடியும் என்பதுடன், சுபீட்சமான மற்றும் சமத்துவமான எதிர்காலத்தில் அதிகளவு பங்களிப்புச் செய்யக்கூடியதாகவும் இருக்கும். 

உலக வங்கியின் மதிப்பீடுகளின் பிரகாரம், 2024 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த ஊழியர் செயலணியில், தொழில் வாய்ப்பின்றிய இளைஞர்களின் வீதம் 22.32% ஆக காணப்பட்டது. அதாவது 15-24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தொழில் வாய்ப்பில்லாத போதும், தொடர்ந்தும் தொழில் வாய்ப்பை நாடிய வண்ணமிருந்ததாக குறிப்பிட்டுள்ளது. ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி கார்மெலின் ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூகப் பொறுப்புணர்வு செயற்பாட்டுப் பிரிவான ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் (JKF) செயற்பாடுகளில் ஒரு அங்கமாக, இளைஞர் வலுவூட்டல் அடங்கியுள்ளது. “எதிர்காலத்துக்காக தேசத்துக்கு வலுவூட்டல்” எனும் எமது நோக்கத்துக்கமைய, பரந்தளவு நிலைபேறான செயற்பாடுகளினூடாக, வாழ்க்கைக்கு அத்தியாவசிய மற்றும் தொழில்நிலை திறன்களை வழங்கி இளைஞர் திறன்களை கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் JKF தொடர்ச்சியாக தன்னை ஈடுபடுத்தியுள்ளது. மேலும், அனுகூலம் பெறுவோர் மற்றும் எமது தேசத்துக்கு பயனளித்து, சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தும் நோக்கில், அவர்களின் மனநிலைகள், நடத்தைகள் மற்றும் பெறுமதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.” என்றார். 

2025 ஜுலை 15 அனுஷ்டிக்கப்படும் உலக இளைஞர் திறன் தினம், இளைஞர் திறன்களில் முதலீடு செய்ய வேண்டியதன் அவசரத் தேவையை நமக்கு நினைவூட்டுகிறது, ஆனால் எங்கள் பல்வேறு திட்டங்கள் மூலம் இந்த உறுதிப்பாட்டை நாங்கள் நிலைநிறுத்துகிறோம். ஜோன் கீல்ஸ் ஆங்கில மொழி புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் (JKELSP) 20 ஆம் ஆண்டுகளாக செயலாற்றுவதுடன், 2025 ஜுன் 26 ஆம் திகதி ஒன்லைன் பேச்சுப் போட்டி ஒன்றை முன்னெடுத்திருந்தது. இதில், 27 தெரிவு செய்யப்பட்ட நிலை 2 மாணவர்கள் தாம் கற்றுக் கொண்ட அம்சங்களை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த இரு-கட்ட நிகழ்ச்சித் திட்டத்தினூடாக, க.பொ.த. சாதாரண தரத்துக்கு முன்னதான பாடசாலை மாணவர்களுக்கு, ஆங்கிலம், தகவல் தொழினுட்பம் மற்றும் மென் திறன் விருத்தி போன்ற பயிற்சிகளை வழங்கப்படுகிறது. அதனூடாக, கல்வி மற்றும் தொழில்நிலை செயற்பாடுகளுக்கு அவசியமான திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான சமத்துவமான வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

2024/25 காலப்பகுதியில் மொத்தமாக 20 பகுதிகளில் 892 புலமைப்பரிசில்கள் இரு நிலைகளிலும் வழங்கப்பட்டிருந்தன. இத்தத் திட்டத்தினூடாக நாடு முழுவதையும் சேர்ந்த 21,500க்கும் அதிகமான மாணவர்கள் நேரடியாக பயன் பெற்றுள்ளனர். 

இளைஞர் திறன் விருத்திச் செயற்பாடுகளின் மற்றுமொரு நீண்ட கால நடவடிக்கையின் அங்கமாக, தொழில் நிலை வழிகாட்டல் நிகழ்ச்சி (Career Guidance Programme) 2025 ஜுன் 19 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மொரட்டுவவைச் சேர்ந்த க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர் தரம் பயிலும் 74 பாடசாலை மாணவர்கள் பயன் பெற்றனர். மாணவர்களுக்கு தமது தொழில்நிலைகளை இனங்காணவும், தொழில் சந்தை எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ளவும் மற்றும் தமது எதிர்காலம் தொடர்பில் தகவலறிந்த தீர்மானங்களை மேற்கொள்ளவும் இந்த அமர்வு உதவியாக அமைந்திருந்தது. 

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையுடன் (NDDCB) இணைந்து, போதைப்பொருள் துஷ்பிரயோக தவிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொடர் நிகழ்வுகள் 2025 ஜுலை 1 மற்றும் 3 ஆம் திகதிகளில் கொழும்பு 02 இல் முன்னெடுக்கப்பட்டன. ஆறு பாடசாலைகளின் கிட்டத்தட்ட 200 மாணவர்கள் மற்றும் 60 க்கும் அதிகமான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். சக அழுத்தங்களை கையாளல், மீட்சியை கட்டியெழுப்பல் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் வினைத்திறனான தொடர்பாடலை ஊக்குவித்தல் தொடர்பில் இந்த அமர்வுகள் கவனம் செலுத்தியிருந்தன. தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையுடன் (NDDCB) இணைந்து, பயிற்சியளிப்போரை பயிற்றுவிக்கும் நிகழ்வும் 2025 பெப்ரவரி 6ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது. பிலியந்தலை கல்வி வலயத்தின் 46 ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தது. அதனூடாக, போதைப்பொருள் துஷ்பிரயோகம் தொடர்பான ஆரம்ப நிலை எச்சரிக்கை சமிக்ஞைகளை இனங்காண்பதற்கு அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. 

JKF “எதிர்காலத்துக்காக தேசத்துக்கு வலுவூட்டல்” என்பதில் 20 வருட பூர்த்தியை கொண்டாடும் நிலையில், இளைஞர்களுக்கு சமத்துவமான வாய்ப்புகளை ஊக்குவித்தல் மற்றும் ஆதரவான சூழல்களை உருவாக்கல் போன்றவற்றில் தன்னை உறுதியாக அர்ப்பணித்துள்ளது. 

கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதாரம், சமூக சுகாதாரம் மற்றும் ஒற்றுமை மற்றும் உயிரியல் பரம்பல் ஆகியவை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் நான்கு (மறுவகைப்படுத்தப்பட்ட) கவனம் செலுத்தும் பகுதிகளாகும் - இது ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (ஜேகேஎச்) இன் சமூக பொறுப்புணர்வு அமைப்பாகும். இது 7 மாறுபட்ட தொழில் துறைகளில் 70 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயக்கும் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் (CSE) பட்டியலிடப்பட்டுள்ள மிகப்பெரிய நிறுவனமாகும். 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம், 18,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது மற்றும் கடந்த 19 ஆண்டுகளாக LMD சஞ்சிகையால் இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் நிறுவனமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 

டிரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்காவின் கூட்டாண்மை அறிக்கையிடல் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மையில் ஜேகேஎச் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் முழு உறுப்பினராகவும், ஐ.நா. உலகளாவிய ஒப்பந்தத்தின் பங்கேற்பாளராகவும் இருக்கும் அதே வேளையில், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மூலமாகவும், இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கணிசமாகக் குறைப்பதில் ஒரு ஊக்கியாக இருக்கும் Plasticcycle என்ற சமூக தொழில்முனைவோர் முயற்சியின் மூலமாகவும், எதிர்காலத்துக்காக தேசத்தை வலுப்படுத்துதல் என்ற அதன் சமூகப் பொறுப்புணர்வு தொலைநோக்குப் பார்வைக்கமைய ஜே.கே.எச் இயக்குகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05