மலையகம்
வீதியை புனரமைத்து தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

Jul 14, 2025 - 12:53 PM -

0

வீதியை புனரமைத்து தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

நுவரெலியா - நானுஓயா, ரதெல்ல கீழ் பிரிவு தோட்ட மக்கள் வீதியில் இறங்கி இன்று (14) காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

 

நானுஓயா, ரதெல்ல கீழ் பிரிவு தோட்டத்தில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குறித்த தோட்டத்தில் இருந்து தலவாக்கலை செல்லும்‌ இரண்டு கிலோமீட்டர் தூரம் கொண்ட வீதி பல வருட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகிறது.

 

இங்கு வாழும் மக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில் குறித்தப் பாதை காணப்படுவதாக தெரிவித்து, பாதையை உடனடியாக சீரமைத்து தருமாறு கோரி இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

கடந்த அரசாங்கத்தில் 2020 ஆம் ஆண்டு புனரமைப்பு பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளை ஆரம்பிப்பதற்கு அடிக்கால் நட்டப்பட்டு வேலை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இடையில் கைவிடப்பட்டுள்ளது.

 

தற்போது இப்பாதையின் ஊடாக செல்ல முடியாத நிலையில் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் கர்ப்பிணி தாய்மார்கள் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் தொழிலுக்கு செல்பவர்கள் என பலரும் ஒவ்வொரு நாலும் பல்வேறு சிரமத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றன.

 

இப்பாதையினை உடனடியாக செய்து தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05