Jul 14, 2025 - 02:42 PM -
0
இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் தனிபார் தீவுகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதியில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.