Jul 14, 2025 - 03:07 PM -
0
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் உலகளவில் 340 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதை தொடர்ந்து மதராஸி மற்றும் பராசக்தி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் மதராஸி திரைப்படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் திகதி வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயனின் திரை வாழக்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று மாவீரன். இப்படத்தை இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர், சரிதா, மோனிஷா, யோகி பாபு, மிஸ்கின் என பலரும் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படம் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 14 ஆம் திகதி ரிலீஸானது. மாவீரன் திரைப்படம் இன்று (14) உடன் வெளிவந்து 2 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 ஆண்டுகளை கடந்திருக்கும் மாவீரன் படம் உலகளவில் 89 கோடி ரூபா வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்தின் வசூல் விவரமாகும்.