Jul 14, 2025 - 03:30 PM -
0
ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்பொழுது ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் கூலி படத்தின் மோனிகா பாடல் வெளியாகி இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
மேலும் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் எந்த படத்தில் நடிக்கப் போகிறார்? யார் அதை இயக்கப்போகிறார்? என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
ரஜினிகாந்திடம் இயக்குநர்களான விவேக் ஆத்ரேயா, எச்.வினோத் மற்றும் நித்திலன் சுவாமிநாதன் ஆகியோர் கதைகளை கூறியுள்ளனர். அதில் மகாராஜா படத்தை இயக்கிய நித்திலன் கூறிய கதை ரஜினிக்கு மிகவும் பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் ஓகே ஆனால் படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்க இருக்கிறது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.