Header Logo

செய்திகள்
விடைப்பெற்றது ‘பாத்திய’

Jul 15, 2025 - 10:34 AM -

0

விடைப்பெற்றது ‘பாத்திய’

நோய்வாய்ப்பட்டு மிகவும் பலவீனமான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ‘பாத்திய’ காட்டு யானை உயிரிழந்துள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் அசோக தன்கொல்ல தலைமையிலான குழு, பொல்பிதிகம பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் ஆபத்தான நிலையில் இருந்த 'பாத்திய' யானைக்கு சிகிச்சை அளிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. 

எனினும், தசைச் சிதைவு மற்றும் பாதிக்கப்பட்ட இரத்த ஓட்டம் காரணமாக யானை ஆபத்தான நிலையில் இருந்ததாக கால்நடை வைத்தியர்கள் தெரிவித்தனர். 

பல நாட்களாக ஒரே பக்கத்தில் இருந்த பாத்திய, நேற்று (14) மறு பக்கத்திற்கு திருப்பப்பட்டது. 

பேராசிரியர் அசோக தன்கொல்லவின் அறிவுறுத்தலின் பேரில், வைத்தியர் தரிந்து விஜேகோன், வனவிலங்கு மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து தேவையான பணிகளை மிகுந்த முயற்சியுடன் மேற்கொண்டார். 

இந்நிலையில், 30-35 வயது மதிக்கப்பட்ட 'பாத்திய' யானை, கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (15) காலை உயிரிழந்தது. 

Comments
0

MOST READ

காணொளி
யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

title