Header Logo
Mogo Academy

கிழக்கு
கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு

Jul 15, 2025 - 10:12 AM -

0

கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு
Mobitel inner

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று (15) கொடியேற்றதுடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

 

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்டதாகவும் இராம பிரானால் வழிபடப்பட்டதாகவும் கருதப்படும் மாமாங்கேஸ்வரரின் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் உள்ள வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை கொண்டுசெல்லும் நிகழ்வு நேற்று (14) மாலை நடைபெற்றது.

 

ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று ஆலய வண்ணக்குமார்கள், பக்தர்கள் புடைசூழ மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.

 

மட்டக்களப்பு நகர் மற்றும் அரசடி ஊடாக பார் வீதியினை அடைந்து பார் வீதியூடாக ஆலயத்திற்கு ஊர்வலமாக கொடிச்சீலை கொண்டு வரப்பட்டது.

 

இன்று பகல் 12.00 மணிக்கு கொடியேற்றத்துடன் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகவுள்ளது.

பத்து தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மஹோற்சவத்தில் தினமும் தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை, சுவாமி உள்வீதியுலா, வெளிவீதியுலா என்பனவை நடைபெறவுள்ளன.

 

எதிர்வரும் 23 ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 24 ஆம் திகதி மிக முக்கியத்துவமான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் தீர்த்தக்கேணியில் சிறப்பாக நடைபெறவுள்ளன.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara