வடக்கு
சிறைக் காவலாளியின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

Jul 15, 2025 - 10:34 AM -

0

சிறைக் காவலாளியின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணம் கொழும்புதுறை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. 

இன்று அதிகாலை 5 மணி அளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் சிறைக் காவலாளியின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 

தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05