Header Logo
SLIC
கிழக்கு
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30 ஆண்டு பூர்த்தி நிகழ்வு

Jul 15, 2025 - 11:13 AM

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30 ஆண்டு பூர்த்தி நிகழ்வு
Mobitel Inner 1278
EDEX Inner

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30 ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் சமுர்த்திப் பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி கௌரவிப்பும் சமுர்த்தி முகாமையாளர் றியாத ஏ மஜீத் எழுதிய 'இலங்கையில் வறுமை ஒழிப்பு, சமுர்த்தித் திட்டத்தின் வகிபாகம்' புத்தக வெளியீட்டு நிகழ்வும் கடந்த 13 ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். ஆஷிக் தலைமையில் தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்போர் அரங்கில் இடம்பெற்றது.

 

நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக  சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீ.டி, களுவராச்சி மற்றும் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

 

நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர் எஸ்.ஜெகராஜன், தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் மற்றும்  சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் எம்.ஜி.எஸ்.எஸ். கித்சிறி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

சமுர்த்தி திட்டத்தின் பயன்கள், பிரதேச அளவில் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் வறுமை ஒழிப்பில் அதன் பங்களிப்பு குறித்து சமுர்த்தி முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் எழுதிய நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

 

நிகழ்வின் கௌரவ அதிதிகளாக சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம். முவஃபிகா, சாய்ந்தமருது பிரதேச செயலக தலைமைப்பீட சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ. மஜீத், திட்ட முகாமையாளர் எஸ். றிபாயா, சமாதான கற்கைகள் நிலைய பணிப்பாளர் பேராசிரியர் எஸ். எல். றியாஸ், சாய்ந்தமருது சமுர்த்தி வங்கிச் சங்க அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.ஆர். ஷர்பீன் உள்ளிட்ட மாவட்டத்தின் சமுர்த்தி முகாமைபாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அமைப்புக்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

நிகழ்வில் வரவேற்புரையை சாய்ந்தமருது பிரதேச செயலக தலைமைப்பீட சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் நிகழ்த்தினார். தலைமை உரையினை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் நிகழ்த்தினார்.

 

நூல் பற்றிய விமர்சன உரையினை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம்.பாஸில் நிகழ்த்தினார், நூலின் ஏற்புரையை நூலாசிரியர், சமுர்த்தி முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் நிகழ்த்தினார்.

 

நிகழ்வின் போது அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசியத் தலைவர் கித்சிறி கமகே, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும், பதில் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளருமான எஸ்.ஜெகராஜன், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சந்தைப்படுத்தல் பிரிவு பணிப்பாளர் எம்.ஜி.எஸ்.எஸ். கித்சிறி, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம, சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீ.டி, களுவராச்சி ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

 

நிகழ்வில் புகைத்தல் எதிர்ப்பு தின கொடி விற்பனையில் அதிகூடிய நிதிகளைச் சேகரித்த மாவட்டத்தில் முதலிடம் பெற்றுத்தந்த முதல் 10 கிராமமட்ட சீ.வி.ஓக்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கௌரவித்தல் நிகழ்வும், அதில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம்களை பெற்றவர்களுக்கு பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

 

மேலும் சிப்தொற புலமைப்பரிசில் பெற்று 2024 ஆம் பல்கலைக் கழகத்திற்கு தெரிவான 15 மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். 


அத்துடன் உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில் வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.

 

சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30 ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு நினைவுச் சின்னம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

 

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கடமையாற்றி ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றதுடன் நிகழ்வின் அதிதிகளுக்கு நினைவுச் சின்ன்ம் வழங்கப்பட்டதுடன் நன்றி உரையினை சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர் நிகழ்த்தினார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278