Jul 15, 2025 - 03:15 PM -
0
தமிழ் திரையுலகில் 60 முதல் 70 வரையான காலகட்டங்களில் 17 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சரோஜா தேவி.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன் என அப்போது முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள் அனைவருடனும் நடித்தவர்.
ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் இவருக்கு உள்ளது.
தற்போது, 87 வயதான சரோஜா தேவி உடல்நல குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் நேற்று (14) காலமானார். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மறைவுக்கு முன் நடிகை சரோஜா தேவியின் கடைசி நிமிடத்தில் என்னென்ன நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, நேற்று காலை வழக்கம்போல் பூஜை செய்துவிட்டு தொலைக்காட்சியைப் பார்த்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் உயிர் பிரிந்தது. தற்போது, இந்த செய்தி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.