Jul 17, 2025 - 09:27 AM -
0
கடந்த மார்ச் 3 ஆம் திகதி இந்தியாவின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், 14 கிலோ தங்கத்தை தனது உடலில் மறைத்து கடத்தி வந்த நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 2.67 கோடி ரூபா பணம் மற்றும் 2.06 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரன்யா ராவ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், ரன்யா ராவுக்கு சொந்தமான 34 கோடி ரூபா மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. தங்க கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த ஓராண்டு சிறை தண்டனை காலத்தில் ரன்யா ராவுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.