சினிமா
விளக்கம் கொடுத்த விஜய்யின் நண்பர் சஞ்சீவ்

Jul 17, 2025 - 11:04 AM -

0

விளக்கம் கொடுத்த விஜய்யின் நண்பர் சஞ்சீவ்

நடிகர் விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இது தான் தனது கடைசி படம் என ஏற்கனவே அறிவித்துவிட்ட அவர் தற்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

 

அடுத்த வருடம் நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளையும் தொடங்கி செய்து வருகிறார்.

 

இந்நிலையில் விஜய் மீது பல்வேறு விமர்சனங்களும் ஒருபக்கம் வந்துகொண்டிருக்கிறது.

 

அதிலும் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் ஒன்றாக இல்லை எனவும் சில செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

 

இந்நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பராக நடிகர் சஞ்சீவ் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது விஜய் பற்றி பேசி இருக்கிறார்.

 

'விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள். விஜய் தன் குடும்பத்தை வெளி உலகத்திற்கு அதிகம் காட்டிக்கொள்ள விரும்பவில்லை' என சஞ்சீவ் கூறி இருக்கிறார். 

Comments
0

MOST READ
01
02
03
04
05