Jul 18, 2025 - 12:30 PM -
0
நேற்று (17) மாலை காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மெரிகல் இன மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
காசல்ரீ நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் நலனைக் கருதி, 60,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டதாக காசல்ரீ நன்னீர் மீன்பிடி சங்கத்தின் தலைவர் கே.கே.ஐவன் தெரிவித்தார்.
மத்திய மாகாண நன்னீர் மீன் வளர்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நன்னீர் மீன் வளர்ப்புத் திணைக்களப் பொறுப்பதிகாரி நிர்மல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காசல்ரீ நன்னீர் மீன்பிடித் தொழிலில் 29 பேர் நாளாந்தம் பணியாற்றி பயனடைவதாக ஐவன் மேலும் தெரிவித்தார்.
--
