Header Logo

சினிமா
யுவன் ஷங்கர் ராஜாவை பிரிகிறாரா வெங்கட் பிரபு?

Jul 19, 2025 - 12:01 PM -

0

யுவன் ஷங்கர் ராஜாவை பிரிகிறாரா வெங்கட் பிரபு?

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று 455 கோடி ரூபாய் வசூலித்தது. இதையடுத்து வெங்கட்பிரபு அடுத்து யாரை வைத்து இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. 

ஆனால் இதுவரை அது சம்மந்தமாக எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அவரின் அடுத்தப் படம் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க, அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. வழக்கமாக வெங்கட்பிரபுவின் அனைத்து படங்களுக்கும் யுவன்தான் இசையமைப்பார். பார்ட்டி மற்றும் மன்மத லீலை ஆகிய படங்களுக்கு மட்டும் பிரேம்ஜி இசையமைத்திருந்தார். இப்போது முதல் முறையாக அனிருத் வெங்கட்பிரபு படத்துக்கு இசையமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இது தொடர்பில் இதுவரையில் எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்புகளும் வௌியாகவில்லை.

Comments
0

MOST READ

காணொளி
யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

title