Jul 19, 2025 - 04:11 PM -
0
பிஷ் வெங்கட் என்று பரவலாக அறியப்பட்ட பிரபல நடிகர் வெங்கட் ராஜ், இன்று காலை காலமானார்.
ஐதராபாத்தின் சந்தாநகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரக பாதிப்புக்காக பிஷ் வெங்கட் சிகிச்சை பெற்று வந்தார்.
இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததால், டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவரது உடல்நிலை படிப்படியாக மோசமடைந்தநிலையில் இன்று உயிரிழந்தார்.
கடந்த 2001-ம் ஆண்டு வெளியான 'குஷி' படத்துடன் தனது திரைப்பட பயணத்தைத் தொடங்கிய பிஷ் வெங்கட், ''கப்பர் சிங்'', ''அதுர்ஸ்'', ''டிஜே தில்லு'', ''கைதி எண் 150'', ''ஆடி'', ''பன்னி'' போன்ற படங்களில் நகைச்சுவை மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.