Jul 19, 2025 - 06:26 PM -
0
நெடுந்தீவில் நேற்று (19) மாலை உயிருடன் பிடிபட்ட முதலை இன்றைய தினம் (19) கிளிநொச்சிக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
பிடிக்கப்பட்ட 5 அடி நீளமுடைய முதலை நெடுந்தீவு பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு இன்றையதினம் கடற்படைப் படகுமூலம் குறிகாட்டுவனுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.
தொடர்ந்து வாகனமூடாக கிளிநொச்சி பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு கொண்டுச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெடுந்தீவு வெட்டுக்களிப் பகுதியினை அண்மித்த இடத்தில் உள்ள நீர் முற்றாக வற்றிப்போன பாழடைந்த கிணற்றில் இருந்தே நேற்றைய தினம் குறித்த முதலை கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.