Jul 20, 2025 - 11:40 AM -
0
நுவரெலியா மாவட்டத்தில் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலையை தொடர்ந்து நானுஓயா பகுதியில் கடுமையான பனி மூட்டத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.
இன்று (20) காலை முதல் நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் புகைபோல் பனி மூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் வாகன சாரதிகள் கடும் அவதி அடைந்து வருகின்றன. பிரதான வீதிகளின் பயணிக்கும் வாகனங்கள் மெதுவாகவும், முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறிப்பாக நுவரெலியா, லபுக்கலை, குடாஓயா, மார்காஸ் தோட்டம், உலக முடிவு பிரதான வீதி, நானுஓயா, நானுஓயா புகையிரத நிலையம், ரதல்ல குறுக்கு வீதி, டெஸ்போட், கிரிமிட்டி ஆகிய பகுதிகளில் பனி மூட்டத்தின் தாக்கம் புகைபோல் நீடித்து வருகிறது இதனால் குறித்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான வீதியே தெரியாத அளவுக்கு புகைபோல் பனி மூட்டம் காட்சி அளித்து வருகிறது எனவும் ஓரளவு மழை ஓய்ந்தாலும் பனியின் தாக்கமும், கடும் குளிரும் குறையவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பலத்த மழை காற்று மற்றும் பனி மூட்டத்தினால் ஏற்படும் அனர்த்தங்களை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
--

