சினிமா
மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமாரின் கார்!

Jul 20, 2025 - 05:50 PM -

0

மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமாரின் கார்!

ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.

 

இத்தாலியில் ஜிடி 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித் குமாரும் பங்கேற்றார்.

 

இந்த கார் பந்தயத்தில் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.

 

பந்தயத்தில் முன்னால் சென்ற கார் திடீரென டிராக்கின் குறுக்கே நின்றதால் அதன் மீது அஜித்தின் கார் மோதியது. விபத்தில் அஜித் காரின் இடதுபுற முன்பகுதி உடைந்து சேதமடைந்தது.

 

இருப்பினும் இதில் காரில் இருந்த அஜித்திற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனத் தகவல் தெரியவந்துள்ளது.
 

Comments
0

MOST READ
01
02
03
04
05