Jul 20, 2025 - 10:59 PM -
0
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.3 ஓவரில் 110 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பகத் சமான் 44 ஓட்டங்களையும், அப்பாஸ் அப்ரிடி 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பங்களாதேஷ் அணி சார்பாக தஸ்கின் அஹமட் 3 விக்கெட்டுக்களையும், முஸ்தபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 111 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பர்வேஸ் ஹொசைன் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து வெற்றிக்கு உறுதுணையாக நின்றார். தவ்ஹித் ஹிருடோய் 36 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
இறுதியில், பங்களாதேஷ் அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதன்மூலம் இருபதுக்கு 20 தொடரில் பங்களாதேஷ் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது பர்வேஸ் ஹொசைனுக்கு வழங்கப்பட்டது.