Jul 21, 2025 - 09:09 AM -
0
ஒரு முன்னோடி நடவடிக்கையாக, DFCC வங்கி தனது DFCC சுதந்திர சேவையாளர் (Freelancer) திட்டத்தின் கீழ், இலங்கையின் துடிப்பான தனியார் கல்வித் துறைக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான நிதிச் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தனியார் கல்வி ஆசிரியர்களின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த நிதிச் சேவையை வங்கி ஒன்று அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். இந்த ஆசிரியர்கள் நாட்டின் உத்தியோகபூர்வ கல்வி முறைக்குத் துணை நின்று, கல்வி விளைவுகளுக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் கணிசமான பங்களிப்பை வழங்கும் ஒரு செல்வாக்குமிக்க பிரிவினர் ஆவர்கள்.
இலங்கையில் 3 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்குச் சேவையாற்றி, சுமார் 100,000 ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பல பில்லியன் ரூபாய் மதிப்புள்ள செழிப்பான துறையாகத் தனியார் கல்வித் துறை உள்ளது. இது இலங்கையின் கல்வி கட்டமைப்பில் நீண்ட காலமாக ஒரு முக்கிய பகுதியாக இருந்து வருகிறது. இந்த அளவுக்கு இதன் முக்கியத்துவம் இருந்தபோதிலும், பல தனியார் கல்வி ஆசிரியர்களுக்கு அவர்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் கட்டமைக்கப்பட்ட நிதிச் சேவைகளுக்கான அணுகல் குறைவாகவே இருக்கிறது.
DFCC வங்கி இந்த இடைவெளியைக் குறைக்கும் வகையில், 05 மில்லியன் ரூபாய் வரையிலான தனிநபர் கடன்கள், பத்து நாட்களுக்குள் வழங்கப்படும் அதிவேக வீட்டுக் கடன்கள், மற்றும் அதே பத்து நாட்களுக்குள் வாகன குத்தகை விநியோக உத்தரவுகள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக, உயர் வருவாய் ஈட்டும் ஆசிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரீமியம் நன்மைகளைக் கொண்ட DFCC பிரெஸ்டீஜ் கூட்டு-பிராண்டட் கடன் அட்டையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இவற்றில் சேரும் கட்டணம் மற்றும் வருடாந்த கட்டணம் தள்ளுபடி, 5,000 ம் ரூபாய்க்கு மேலான ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 1% (வீத) பண மீளளிப்பு, மற்றும் சேவை வழங்குநர்களுக்கு நேரடியாகச் செலுத்தப்படும் எரிபொருள் மற்றும் பயன்பாட்டு பில்களுக்கான கட்டணங்களுக்கு மேலதிகமாக 2% (வீத) பண மீளளிப்பு ஆகியவை அடங்கும். மேலும், 25,000 ம் ரூபாய்க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு ஆறு மாதங்களுக்கான 0% வட்டி இலகு தவணைத் திட்டங்களையும் அட்டையாளர்கள் அனுபவிக்க முடியும்.
இதற்கு மேலதிகமாக, இந்த அட்டை LoungeKey மூலம் வருடத்திற்கு ஒரு இலவச விமான நிலைய லவுஞ்ச் வருகை மற்றும் மீண்டும் விமான டிக்கெட் வாங்கும்போது இலவச பயண காப்பீடு போன்ற வாழ்க்கை முறை சலுகைகளையும் வழங்குகிறது.
இந்த சலுகைகள் ஆனது தனியார் கல்வி ஆசியியர்களின் செயல்பாட்டு யதார்த்தங்கள் மற்றும் இலக்குகளை ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டவையாகும். இவர்களில் பலர் பெரிய மாணவர் குழுக்கள், பல இடங்கள் மற்றும் மாறிவரும் தளவாட மற்றும் டிஜிட்டல் தேவைகளைச் சமநிலைப்படுத்துகின்றனர். இந்தத் திட்டத்தில் DFCC வங்கியின் DMT (வீட்டு வாசலில் பணப் பரிமாற்றம்) சேவை மூலம் தினசரி வருமான சேகரிப்பு ஆதரவும் அடங்கும். இது, ஆசிரியர்கள் கிளையைப் பார்வையிடாமல் தங்கள் வருவாயை வசதியாக டெபாசிட் செய்ய உதவுகிறது. இது அவர்களின் வீட்டு வாசலில் பாதுகாப்பான, தொந்தரவு இல்லாத பண சேகரிப்பு தீர்வை வழங்குவதன் மூலம் பணப்புழக்கத்தை மிகவும் திறமையாக நிர்வகிக்க வழி வகுக்கிறது.
இலங்கையின் கல்வி நிலப்பரப்பை வடிவமைப்பதில் தனியார் கல்வி ஆசிரியர்கள் குறிப்பிடத்தக்க பங்கை இந்த முயற்சி அங்கீகரிக்கிறது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு கூடுதல் ஆதரவு மற்றும் சிறப்பு கற்றலை வழங்குபவர்களாக, அவர்களின் வேலை மாதிரிகள் மற்றும் இலக்குகளைப் பிரதிபலிக்கும் நிதி கருவிகள் அவர்களுக்குத் தேவையானதாகும். DFCC வங்கியின் இந்த பிரத்தியேக சலுகையானது கல்வி ஆசிரியர்கள் தங்கள் முயற்சிகளை விரிவுபடுத்துவதற்கும், உட்கட்டமைப்பில் முதலீடு செய்யவதற்கும், மற்றும் கண்ணியமான, தொழில்மயமான வழியில் கடன் அணுகலை பெறவும் உதவுகிறது.
இந்த வெளியீடு குறித்து கருத்து தெரிவித்த DFCC வங்கியின் சில்லறை வங்கி மற்றும் வியாபார பிரிவின் சிரேஷ்ட உபத்தலைவர் ஆசிரி இட்டமல்கொட, ‘DFCC வங்கியில், மற்றவர்கள் உடனடியாக அங்கீகரிக்காத இடங்களில் நாங்கள் வாய்ப்புகளைக் காண்கிறோம். தனியார் கல்வித் துறை செழித்து வளர்கிறது மற்றும் எங்கள் பரந்த கல்வி சூழல் அமைப்புக்கு ஒரு துணையாகச் செயல்படுகிறது. தனியார் கல்வி ஆசிரியர்களுக்கான எங்கள் சுதந்திர சேவையாளர் திட்டம், அவர்களின் நிதித் தேவைகள், வேலை முறைகள் மற்றும் நீண்டகால இலக்குகள் குறித்து கவனமான ஆராய்ச்சிக்குப் பிறகு வடிவமைக்கப்பட்டதாகும். இது கல்விக்கு ஆதரவளிக்கும் தனிநபர்களுக்குப் பொருத்தமான, பொறுப்பான மற்றும் அதிகாரமளிக்கும் கருவிகளை வழங்குவதன் மூலம் ஆதரவளிக்கப்படுகிறது’ என அவர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டம் இலங்கையின் தனியார் ஆசிரியர்களின் பல்வேறு தேவைகளுக்குப் பதிலளிக்கும் உள்ளடக்கத்துடன், நோக்கம் சார்ந்த நிதி தீர்வுகளுக்கான DFCC வங்கியின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. தனியார் கல்வி ஆசிரியர்களின் பங்களிப்புகளை முறையாக அங்கீகரித்து, தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான அணுகலை வழங்குவதன் மூலம், DFCC வங்கி, வங்கிகள் சுதந்திர சேவையாளர் மற்றும் GIG பொருளாதாரத் துறைகளுடன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு புதிய அளவுகோலையும் நிர்ணயித்துள்ளது.
தனியார் கல்வி ஆசிரியர்களுக்கான DFCC சுதந்திர சேவையாளர் திட்டம் குறித்த மேலதிக தகவல்களுக்கு, www.dfcc.lk என்ற இனணயத்தளம் ஊடாக பார்வையிடவும், அல்லது 0112350000 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும்.

