Jul 21, 2025 - 09:45 AM -
0
ஐ.சி.சி.யின் வருடாந்திர மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் 2027, 2029 மற்றும் 2031 ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் திறனை அங்கீகரிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஐ.சி.சி. தெரிவித்தது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தகது.