Jul 21, 2025 - 10:00 AM -
0
Hameedia குழுமத்தின் கீழ் இயங்கும் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க ஆண்கள் ஆடை நாமமான Signature இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு மற்றும் தடகள காலணிளின் நாமமான Campus Activewear Ltd உடனான கூட்டாண்மை மூலம் காலணி துறையில் தனது புதிய முயற்சியை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த கூட்டாண்மை மூலம் Campus Activewear நிறுவனத்தின் விரும்பப்பட்ட காலணித் தயாரிப்புகள் முதல் முறையாக இலங்கை நுகர்வோருக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இவை தற்போது Signature காட்சியறைகள், H Sports விற்பனை நிலையங்கள், முன்னணி சில்லறை பங்களார்கள் மற்றும் பிரத்தியேக கடைகளின் விரிவான வலையமைப்பின் மூலம் நாடு முழுவதும் கிடைக்கின்றன. மேலும், https://signature.lk இணையதளத்தின் மூலம் நாடு முழுவதும் விநியோக வசதியுடன் ஆன்லைனிலும் கிடைக்கிறது.
2005 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட Campus Activewear அதன் தொடக்கத்திலிருந்தே இந்தியாவின் காலணித் துறையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தி துல்லியமான மற்றும் ஸ்டைலுடன் வடிவமைக்கப்பட்ட நவநாகரீக, வசதியான மற்றும் மலிவு விலையில் காலணிகளை வழங்குவதன் மூலம் இளைஞர்கள் மற்றும் அன்றாட ஃபேஷன் ஆர்வலர்களிடையே பெரும் புகழைப் பெற்றுள்ளது. 2024 நிதியாண்டில் 22.2 மில்லியனுக்கும் அதிகமான ஜோடிகள் விற்பனையாகி, இந்தியா முழுவதும் 23000+ சில்லறை விற்பனை நிலையங்கள், 250+ பிரத்யேக பிராண்ட் விற்பனை நிலையங்கள் உட்பட விரிவான இருப்புடன் Campus இப்போது இந்த அற்புதமான புதிய கூட்டணி மூலம் அதன் வெற்றிகரமான சூத்திரத்தை இலங்கைக்குக் கொண்டு வருகிறது.
இந்த கூட்டாண்மையைப் பற்றிய தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய Signature நிறுவனத்தின் இயக்குனர் அம்ஜத் ஹமீத் கூறும்போது “Signatureஇல், நாங்கள் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டைல், வசதி மற்றும் மதிப்பை வழங்கும் எங்கள் வாக்குறுதியுடன் ஒத்துப்போகும் பிராண்டுகளை நாங்கள் எப்போதும் தேடுகிறோம் என்றார். Campus இன்றைய ஃபேஷன் உணர்வுள்ள இளைஞர்களுடன் வலுவாக எதிரொலிக்கும் ஒரு நாமம் ஆகும், மேலும் இந்த புகழ்பெற்ற பெயரை இலங்கைக்குக் கொண்டு வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். Signature ஆண்களுக்கான ஃபேஷனில் செய்ததைப் போலவே இந்தக் கூட்டாண்மை இங்குள்ள காலணி சில்லறை விற்பனை இடத்தை மறுவரையறை செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்.
வாடிக்கையாளர் தேவைகளுக்கான ஆழ்ந்த புரிதல் மற்றும் புதுமையை நோக்கிய பணியில் நிலை பெற்ற Campus ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கான பரந்த வகை காலணிகளை வழங்குகிறது. ஒவ்வொரு ஜோடியும், தங்களின் அன்றாட வாழ்க்கையில் வசதி, நீடித்த தன்மை மற்றும் நவீன ஃபேஷனை விரும்பும் இளமையான, உற்சாகமான வாடிக்கையாளர்களின் ஆவலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
Signature உடனான ஒரு மூலோபாய கூட்டாண்மை மூலம் இலங்கை சந்தையில் நுழைவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று Campus Activewear Ltd நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் முழு நேர இயக்குநரான நிகில் அகர்வால் கூறினார். எங்கள் பிராண்ட் மதிப்புகள் மற்றும் தயாரிப்பு பலங்களுடன் உண்மையிலேயே இணைக்கப்பட்டுள்ள சந்தைகளில் வளர எங்கள் பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. இலங்கையின் வளர்ந்து வரும் வாழ்க்கை முறை நிலப்பரப்பு மற்றும் அணுகக்கூடிய ஃபேஷன் முன்னோக்கி தயாரிப்புகளுக்கான ஆர்வம் ஆகியவை அதை எங்களுக்கு இயற்கையான பொருத்தமாக ஆக்குகின்றன. Signatureஇன் வலுவான பிராண்ட் இருப்பு மற்றும் எங்கள் சொந்த நிரூபிக்கப்பட்ட தயாரிப்பு திறன்களைப் பயன்படுத்துவதன் மூலம், இந்தியாவில் நாங்கள் கண்ட வெற்றியைப் பிரதிபலிக்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்.
Signature ஆடைகளுக்கு அப்பால் அதன் வாழ்க்கை முறை சலுகையை விரிவுபடுத்துவதால் இந்த உரிமையாளர் கூட்டாண்மை நவீன இலங்கையர்களுக்கு ஒரே இடமாக அதன் நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது. Campus காலணிகளின் அறிமுகத்துடன், Signature அதன் வாழ்க்கை முறை சலுகையை வலுப்படுத்துகிறது - இலங்கையர்கள் ஒவ்வொரு அடியிலும் நம்பிக்கை மற்றும் ஆறுதல் இரண்டையும் வழங்கும் உலகளவில் விரும்பப்படும் வடிவமைப்புகளை அணுக அனுமதிக்கிறது.

