இந்தியா
முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் ஓய்வெடுக்க வைத்தியர்கள் அறிவுறுத்தல்

Jul 21, 2025 - 12:47 PM -

0

முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் ஓய்வெடுக்க வைத்தியர்கள் அறிவுறுத்தல்

சென்னை அப்போலோ வைத்தியசாலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று (21) வழக்கமான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. 

பரிசோதனையை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

இதனால் அடுத்த இரு நாட்களுக்கு முதல்வர் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 22 மற்றும் 23ஆம் திகதிகளில் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளவிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05