வணிகம்
10 வது பந்தயத்திற்காக வெற்றிகரமாக மீளவந்த வளவை சுபர்க்ரோஸ் மூலம் மோட்டார் பந்தயத்தில் மைல்கல்லை எட்டச்செய்த ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே

Jul 21, 2025 - 01:23 PM -

0

10 வது பந்தயத்திற்காக வெற்றிகரமாக மீளவந்த வளவை சுபர்க்ரோஸ் மூலம் மோட்டார் பந்தயத்தில் மைல்கல்லை எட்டச்செய்த ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே

ஐந்து வருட காத்திருப்பின் பின்னர் மாபெரும் வெற்றியினை உருவாக்கி, இலங்கையின் மிகமுக்கிய மோட்டார் பந்தயங்களில் ஒன்றாக மீளவும் வெற்றிபெற்றுள்ளது ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே வளவை சுபர்க்ரோஸ் 2025. புத்துயிர்க்கப்பட்ட பரபரப்பான போட்டிகள் தனிச்சிறப்பான வெற்றிகள், மற்றும் வரலாற்றுச் சாதனை செய்த ரசிகர்களின் பங்கேற்பு என்பவற்றுடன், இந்நிகழ்வானது இலங்கையின் முதற்தர தன்னியக்க சுத்திகரிப்பு நிறப்பூச்சு வர்த்தக நாமமான ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் பிரதான அனுசரணையினால் வலுவூட்டப்பெற்றிருந்தது. 

முக்கியத்துவம் வாய்ந்த செவனகலயின் கிராப்ட்ஸ்மேன் ஒட்டோட்ரோமில் ஜுலை 12 மற்றும் 13 வார இறுதிகளில் இடம்பெற்ற வளவை சுபர்க்ரோஸானது 50,000 இற்கும் மேற்பட்ட உற்சாகமிக்க பார்வையாளர்களை ஈர்த்திருந்தது. இந்நிகழ்வானது - 21 அதிர்ச்சிகரமான பந்தயங்கள், அதிநவீன பாதுகாப்பு உட்கட்டமைப்புக்கள், மற்றும் சமுதாயம், போட்டிப்பந்தயங்கள் மற்றும் புத்தாக்கத்தின் புதுப்பிக்கப்பட்ட ஆதர்சம் என ஒவ்வொரு முகப்பினையும் வெளிப்படுத்தியிருந்தது. 

இலங்கையின் மிகவும் கொண்டாடப்பெற்ற மோட்டார் பந்தய வெற்றியாளரும், ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் நீண்டகால வர்த்தகநாம தூதுவரும், SL-GT 3500 பிரதான நிகழ்வினில் வெற்றியீட்டி, தன்னுடைய சாதனைமிக்க தொழில்வாழ்வில் மற்றொரு பதக்கத்தினைச் சூடிக்கொண்டவருமான அஷான் சில்வா மீது கவனம் வெகுவாக குவிந்திருந்தது. 

“இவ்வார இறுதியானது பந்தயம் என்பதனைத் தாண்டி உயிர்ப்பானதாக காணப்பட்டது” என்ற ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் இலங்கைக்கான தலைவர் திரு. வைத்தியலிங்கம் கிரிதரன் அவர்கள், மேலும் “இலங்கையின் மோட்டார் பந்தயத்தில் இப்புதிய அத்தியாயத்திற்கு அனுசரணை வழங்கியதில் நாம் அளவிடமுடியாதளவு பெருமையடைகின்றோம். எம்முடைய தொடர்ச்சியான அனுசரணையானது நாட்டின் வாகன கைத்தொழிற்றுறைக்கான – அதிநவீன நிறப்பூச்சு தொடக்கம் மோட்டார் பந்நதயங்கள் மற்றும் தொழிநுட்ப கல்வி வரை- எமது அர்ப்பணிப்பினை வெளிப்படுத்துகின்றது. எம்முடைய பங்குதாரர்கள் மற்றும் மோட்டார் பந்தய சமுதாயத்துடன் இணைந்து செயற்பாடு மற்றும் முன்னேற்றம் இரண்டையும் முற்கொண்டுசெல்ல நாம் உதவுகின்றோம்” என்றார். 

வளவை சுபர்க்ரோஸிலான ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் அனுசரணையானது உள்நாட்டு வாகன கைத்தொழிற்றுறையை உயர்த்துவதிலான பரந்த மூலோபாயத்தின் ஒரு அங்கமாகும். அதனது நம்பிக்கைமிகு தன்னியக்க நிறப்பூச்சு பிரிவுகள் முதல் தொழிற்பயிற்சி அதிகாரசபைகள் போன்ற நிறுவனங்களுடனான அதனது பங்குடைமை வரையில், ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயானது திறன் அபிவிருத்தி, தர மேம்பாடு மற்றும் நீண்டகால நிறுவன வளர்ச்சி என்பவற்றில் வினையூக்கத்துடன் முதலிட்டு வருகின்றது. 

ஆசியாவின் மிகப்பெரியதும் மிகவும் மதிக்கப்படுவதுமான நிறப்பூச்சு கம்பெனிகளில் ஒன்றான - ஏசியன் பெயிண்ட்ஸ் குழுமத்தின் உறுப்பினராக, ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயானது 80 வருடங்களிற்கு மேற்பட்டதும், 15 நாடுகளில் காணப்படுவதும், R&D கலையில் தனிச்சிறப்பானதும், உலகளவில் தனித்துவமான உற்பத்தி தரநிர்ணயமிக்கதும் தன்னியக்க அலங்கார, கைத்தொழில்சார், மற்றும் பாதுகாப்புமிக்க நிறப்பூச்சுக்களின் பாரம்பரியத்தினை இலங்கைக்கு கொணர்கின்றது. இதனது தன்னியக்க நிறப்பூச்சு தீர்வுகளானவை ஒப்பற்ற நீடிப்பு, துல்லியமான பூரணத்துவம், மற்றும் தொழிநுட்ப புத்தாக்கங்கள் - உலகத்தரம்வாய்ந்த பெறுபேறுகளை வழங்க பயிற்சிப்பட்டறைகள் திருத்தகங்கள், துறைசார் தொழில் வல்லுநர்களிற்கு உதவுதல் என்பவற்றுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

வளவை சுபர்க்ரோஸ் 2025 ஆனது அதனது பரபரப்பான பந்தயங்களுக்காக மாத்திரமின்றி அதன் போராட்டக் குணம், பங்குடைமை மற்றும் பகிரப்பட்ட வேட்கை என்பவற்றுக்காகவும் நினைவிற்கொள்ளப்படும். இவ்வரலாற்று சிறப்புமிக்க மீள்வருகையில் ஒரு பாகமாக விளங்கியமைக்கு ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயானது பெருமையடைவதுடன் - இலங்கையின் தன்னியக்க அதியுன்னதத்தின் எதிர்காலத்தினை வலுவூட்டும் அதன் நோக்கத்திலும் திடமாக காணப்படும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05