Jul 21, 2025 - 03:26 PM -
0
உயிர்கொல்லி போதைப்பொருளை அடிமையான இளைஞன் ஒருவர் பாழடைந்த வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ். நகர் பகுதியை அண்மித்த பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞனே, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
--