வணிகம்
DIFC-யில் பிரதிநிதி அலுவலக திறப்பைக் கொண்டாடிய கொமர்ஷல் வங்கி

Jul 21, 2025 - 04:25 PM -

0

DIFC-யில் பிரதிநிதி அலுவலக திறப்பைக் கொண்டாடிய கொமர்ஷல் வங்கி

துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) கொமர்ஷல் வங்கி பிரதிநிதி அலுவலகம் அண்மையில் திறக்கப்பட்டமையானது வங்கிக்கு மட்டுமல்லாது இலங்கையின் வங்கித் துறைக்கும் ஒரு மைல்கல்லாக திகழும் அதேவேளை வங்கியின் உயர் முகாமைத்துவத்தினர் மற்றும் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த பிரமுகர்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வானது கொண்டாடப்பட்டது. 

DIFC இன் தி கேட் வில்லேஜ் 10, லெவல் 7 இல் பிரதிநிதி அலுவலகத்தின் முறையான திறப்பு விழாவை கொமர்ஷல் வங்கியின் தலைவர் திரு. ஷர்ஹான் முஹ்சீன் மற்றும் வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு.சனத் மனதுங்க மற்றும் DIFC அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஆரிஃப் அமிரி ஆகியோர் இணைந்து நடத்தினர். 

திறப்பு விழாவைத் தொடர்ந்து, துபாயில் உள்ள ஷாங்க்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற வலையமைப்பு அறிமுக நிகழ்வில், ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான இலங்கையின் நியமிக்கப்பட்ட தூதுவர் மேதகு பேராசிரியர் அருஷா கூரே மற்றும் இரு நாடுகளின் வர்த்தக சமூகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

DIFC-யில் உள்ள கொமர்ஷல் வங்கியின் பிரதிநிதி அலுவலகம், பிராந்தியத்தில் வங்கியின் வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தளத்திற்கு ஒரு முக்கிய தொடர்பு புள்ளியாக செயல்படும், இதில் இலங்கையில் உள்ள முக்கிய பங்குதாரர்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) செயல்பாடுகளைக் கொண்ட பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகியவை அடங்கும். இலங்கையில் செயற்படும் வங்கிகளில் கொமர்ஷல் வங்கியானது ஏற்கனவே பரந்த சர்வதேச தடத்தை பதித்துள்ளது. இதற்கிணங்க பங்களாதேஷில் 20 கிளைகள், மியான்மரில் ஒரு நுண் நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் ஒரு முழுமையான அடுக்கு I வங்கி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 

பிரதிநிதி அலுவலக திறப்பு விழாவில் கொமர்ஷல் வங்கியின் தலைவர் திரு. ஷர்ஹான் முஹ்சீன் மற்றும் முகாமைத்துவப்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க, DIFC அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. ஆரிஃப் அமிரி மற்றும் DIFC அதிகாரசபையின் வங்கிகள் மற்றும் மூலதன சந்தைகளின் தலைவர் திரு. அஹ்மத் அல் அவ்லாகி ஆகியோரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான இலங்கை தூதுவர் (வலது) நிகழ்வில் உரையாற்றுவதையும் படத்தில் காணலாம்.

Comments
0

MOST READ
01
02
03
04
05