வடக்கு
செம்மணி புதைகுழியின் இரண்டாம் கட்ட16 ஆவது நாள் அகழ்வு

Jul 21, 2025 - 06:25 PM -

0

செம்மணி புதைகுழியின் இரண்டாம் கட்ட16 ஆவது நாள் அகழ்வு

இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் - அரியாலை சித்துப்பாத்தி இந்துமயானம் - (செம்மணி) மனிதப் புதைகுழியின் அகழ்வுப்பணிகள் இன்று (21) மீள ஆரம்பமாகின. இரண்டாம் கட்ட அகழ்வில் 16 ஆம் நாள் அகழ்வுப் பணி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்களது மேற்பார்வையில் இடம்பெற்றது.

 

இன்றைய அகழ்வின் போது ஏழு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

இதன்படி சித்துப்பாத்தி (செம்மணி) மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட  மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.

 

இதுவரை 65 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

 

யாழ்ப்பாண பொலிஸாரின் விசாரணையின் கீழ் இருந்த மனிதப் புதைகுழி விசாரணை குற்றப் புலனாய்வு (CID) பிரிவினருக்கு பொலிஸ் மா அதிபரினால் பாரப்படுத்தப்பட்டுள்ளது.
 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05