Jul 22, 2025 - 02:45 PM -
0
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள விவசாய அமைச்சின் நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல்களஞ்சியசாலையில் நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் கடந்த 11 ஆம் திகதி முதல் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று (22) நெல் கொள்வனவு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.
தொடர்ச்சியாக விவசாயிகள் தங்களது நெல்லினை அரசாங்கம் நியாயன விலையில் கொள்வனவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் விவசாய அமைச்சின் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஒட்டுசுட்டான் நெல்களஞ்சியசாலையில் குறித்த நெல் கொள்வனவு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் நிர்ணயிக்கப்பட்ட தரத்தின் அடிப்படையில் ஒரு கிலோ நெல்லுக்கு நாடு (வெள்ளை /சிவப்பு ) 120 ரூபாவுக்கும் சம்பா (வெள்ளை /சிவப்பு ) 125 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படுகிறது.
ஒட்டுசுட்டான் பகுதியில் தங்களது வீடுகளில் நெல்லினை விற்பனை செய்வதற்காக வைத்திருக்கின்ற விவசாயிகள் நெல்லின் உடைய மாதிரிகளை கொண்டு வந்து காண்பித்து அதனுடைய தரத்தை உறுதி செய்த பின்னர் திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் குறித்த நெற்களஞ்சிய சாலையில் நெல்லின கொண்டு வந்து வழங்க முடியும் என நெல் சந்தைப்படுத்தல் சபையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு நெல்களஞ்சிய சாலைகளிலும் நெல் கொள்வனவு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
--