வடக்கு
எட்டு மண்டை ஓட்டு தொகுதிகள் புதிதாக அடையாளம்

Jul 22, 2025 - 06:40 PM -

0

எட்டு மண்டை ஓட்டு தொகுதிகள் புதிதாக அடையாளம்

சித்துப்பாத்தி இந்துமயானம் - (செம்மணி) மனிதப் புதைகுழியின் அகழ்வுப்பணிகள் இன்று (22) இடம்பெற்றது. இரண்டாம் கட்ட அகழ்வில் 17 ஆம் நாள் அகழ்வுப் பணி இடம்பெற்றது.

 

இதுவரை 65 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

 

நேற்று (21) அகழ்வின் போது ஏழு மண்டை ஓட்டு தொகுதிகளும், இன்று எட்டு மண்டை ஓட்டு தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. மொத்தமாக 15 என்புத் தொகுதிகள் மொத்தமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

எச்சங்களில், 6 முதல் 7 வரை சிறுவர்கள்  மற்றும் குழந்தைகளுடையதாக இருக்கலாம்  என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ளன . ஒரு குழந்தைகள் அருந்தும் பால் போச்சி (போத்தல்) மற்றும் சில ஆடையை ஒத்த துணிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

 

இன்றைய கண்டுபிடிப்புகளுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது, இவற்றில்  65 எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05