Jul 23, 2025 - 09:35 AM -
0
இந்தியாவின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக மே 7 ஆம் திகதி இந்தியா ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளும் மோதலில் ஈடுபட்டன. மே 9 ஆம் திகதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட்டது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
பாகிஸ்தானும் தங்கள் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது. அண்மையில் பாகிஸ்தான் ஏற்கனவே இந்திய விமான நிறுவனங்களுக்கான தனது வான்வெளித் தடையை ஆகஸ்ட் 24 ஆம் திகதி வரை நீட்டித்தது.
இந்நிலையில் இந்தியாவும் பாகிஸ்தான் விமானங்களுக்கான தடையை மேலும் 1 மாதம் நீட்டித்துள்ளது.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
'பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் நுழைவதற்கான அதிகாரப்பூர்வ தடை 2025 ஆகஸ்ட் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு தற்போதைய பாதுகாப்பு நெறிமுறைகளை பிரதிபலிக்கிறது' என தெரிவித்துள்ளார்.