Jul 23, 2025 - 11:45 AM -
0
தமிழில் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா, தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார்.
2018 ஆம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளஸ் என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று மும்பை பொலிஸில் புகார் அளித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தனது சொந்த வீட்டிலேயே தம்மை துன்புறுத்துவதாகவும், தமக்கு யாராவது உதவி செய்யும்படியும் சமூக வலைதளத்தில் தனுஸ்ரீ தத்தா வீடியோ வெளியிட்டு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அந்த வீடியோவில் metoo புகார் கொடுத்ததில் இருந்து தனது சொந்த வீட்டிலேயே நான் மிகவும் துன்புறுத்தப்பட்டேன். அதனால் மிகவும் சோர்ந்து விட்டேன். இப்போது எனக்கு உடல்நிலை சரியில்லை' என்று தெரிவித்தார்.