Jul 23, 2025 - 12:55 PM -
0
உள்ளுர் தொழில்முயற்சியாண்மையாளர்களை உயர்ச்சியடையச் செய்தல் மற்றும் அவர்களுக்காக புதிய சந்தைகளைத் திறத்தல் என்பவற்றுக்கான அதனது அயராத அர்ப்பணிப்பின் தொடர்ச்சியாக, SDB சமீபத்தில் எப்.ஆர்.சேனநாயக்க மாவத்தையிலுள்ள கொழும்பு நகர சபை மண்டப வளாக முன்றலில், “SDB வியாபார பிரதீபா 2025” வர்த்தக சந்தை துவக்க விழாவினை பெருமையுடன் நடாத்தியது . இந்நிகழ்வானது SDB வங்கியின் கிராமிய எழுச்சி நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய நிகழ்வொன்றாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன், அது மேல் மாகாண ஆளுநர், திரு. ஹனிப் யூசுப்; SDB வங்கியின் தவிசாளர், திருமதி டினிதி ரத்நாயக்க; நிறைவேற்று பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி, திரு. கபில ஆரியரத்ன; மற்றும் SDB வங்கியின் பெருநிறுவன முகாமைத்துவ அணி என்பவற்றின் பங்கேற்பினால் சிறப்பிக்கப்பட்டிருந்தது. இச்சந்தையானது பாரம்பரிய உணவு மற்றும் பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சூழல் நேய உற்பத்திகள், கைவினைப்பொருட்கள், மற்றும் பத்திக் கைதறி ஆடைகள் போன்ற பல்வேறு உற்பத்திகளினை சிறப்பம்சமாக கொண்டிருந்ததுடன், 100 அதிசிறப்பான உள்ளுர் தொழில்முயற்சியாண்மையாளர்களின் பன்முக திறன்களை வெளிப்படுத்துவதாகவும் காணப்பட்டது.
அதனது துவக்கம் முதலே, SDB வங்கியின் கிராமிய எழுச்சி நிகழ்ச்சித்திட்டமானது இலங்கை முழுதுமான சுயதொழில்வாண்மையாளர்களை வலுப்படுத்துவதற்கான கருவியாகவே விளங்கிவந்துள்ளது. கூட்டுறவு சங்கங்கள், பிரதேச செயலகங்கள், மற்றும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடனான ஒருங்கிணைவினை வளர்ப்பதன் ஊடாக, நாடளாவியரீதியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3000 இற்கும் மேற்பட்ட சுயதொழில்வாண்மையாளர்களுக்கு வெற்றிகரமாக பலனளித்துள்ளது. இப்பயணத்தின் ஒரு அங்கமாக, SDB வங்கியானது உயர் தரத்திலான உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதன் ஊடாக, குறிப்பிடத்தக்க வருமானம் மற்றும் அங்கீகரிக்கப்படும் நிலையை உருவாக்கி, வர்த்தக சந்தை அனுபவத்தினை பழக்கப்படுத்திக்கொள்ள இச்சுயதொழில்வாண்மையாளர்களுக்கு உதவ பல சிறிய அளவிலாள சந்தைகளை உருவாக்கியிருந்தது. SDB வங்கியினால் இச்சந்தையை ஒழுங்கமைப்பதன் மைய நோக்கமாக, இவ்வடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டதாக, “SDB வியாபார பிரதீபா 2025”, இச்சிறியவிலான உள்ளுர சுயதொழில்வாண்மையாளர்களின் உற்பத்திகள் மற்றும் வர்த்தக நாமங்களிற்கான புதிய சந்தை வாய்ப்புக்களையும், புதிய வாடிக்கையாளர் பிரிவுகளையும் மற்றும் நல்ல அங்கீகாரத்தினையும் திறந்துள்ளது.
இந்நிகழ்வின்போது, இவ்வுள்ளுர் சுயதொழில்வாண்மையாளர்களின் வியாபாரத்தினை மேலும் விளம்பரப்படுத்துவதற்காக SDB வியாபார பிரதீபா மார்க்கெட் பிளேஸ் எனும் தலைப்பில் சந்தை வடிவில் முகநூல் சமுதாய குழுவொன்றையும் ஆரம்பித்துள்ளது. இப்புத்தாக்கமான மேடையானது அவர்களது அடைவுகளை விரிவுபடுத்துவதற்கும் தங்களது உற்பத்திகளை பரந்த வாடிக்கையாளர்களுக்கு விளம்பரப்படுத்துவதற்கும் ஆர்வமிகு வாயப்புக்களை வழங்குவதுடன், வளர்ச்சி மற்றும் அறியப்படுவதற்கான புதிய பாதைகளையும் உருவாக்கியுள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றும்போது, நிறைவேற்று பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி, திரு. கபில ஆரியரத்ன அவர்கள், “எம்முடைய கிராமிய எழுச்சி நிகழ்ச்சித்திட்டமானது ஒரு துவக்கம் என்பதற்கும் அப்பாலானது; இது உள்ளுர் சுயதொழில்வாண்மையாளர்களை கிராமிய சமுதாய எழுச்சியூடாக வலுப்படுத்துவதற்கும், புத்தாக்கத்தினை முற்செலுத்தவும் மற்றும் எமது தேசத்தின் சுயதொழில்வாண்மையாளர்களது திறனுக்கான வாய்ப்புக்களை உருவாக்குவதற்குமான செயற்பாடாகும். எம்முடைய சொந்த சுயதொழில்வாண்மையாளர்களது திறன்களையும் புத்தாக்கத்தினையும் மதித்து வளர்க்கும் வங்கியொன்றாக, அவர்களது அனைத்து வகையான வியாபார நடவடிக்கைகளின் அபிவிருத்தியிலும் ஆதரவளிப்பதில் மிக்க பெருமிதம் கொள்கின்றோம்.” என்றார்.
இவ்வர்த்தக சந்தை மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சந்தை இடங்கள் என்பவற்றின் ஊடாக, SDB வங்கியானது இலங்கையின் அபிவிருத்தி வலு மையமாக விளங்கும் அதன் நோக்கத்தினை விரிவுபடுத்தியுள்ளது. வியாபரா வளர்ச்சிக்கான விலைமதிப்பற்ற மேடையொன்றினை உருவாக்கியிருப்பதன் ஊடாக, ஒரு நேரத்தில் ஒரு வியாபாரத்திற்காக சுயதொழில்வாண்மை கிடைப்பரப்பை நிலைமாற்றுவதனை தொடரும்.
SDB வங்கி:
வாடிக்கையாளர் மைய மற்றும் ஒவ்வொரு தனிநபரினதும் தேவைகளுக்கென நேர்த்தியாக்கப்பட்ட பொருத்தமான ஆதரவிற்கென அர்ப்பணிக்கப்பட்ட, எதிர்காலத்திற்கு தயாரான வங்கியொன்றாக, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் பிரதான பலகை மற்றும் BB +(lka) பிட்ச் ரேட்டிங்கிலான பட்டியலுடன், இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குப்படுத்தப்படுகின்ற அனுமதிப்பெற்ற விசேடத்துவப்படுத்தப்பட்ட வங்கியொன்றாகும். நாடளாவியரீதியில் 94 கிளைகளின் வலையமைப்பினூடாக, வங்கியானது நாடுமுழுதும் அதனது சில்லறை, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள், கூட்டுறவு, மற்றும் வியாபார வங்கியியல் வாடிக்கையார்களிற்கு நிதிச் சேவைகளின் பொருத்தமான வகைகளை வழங்குகின்றது. நிலைபேறான நடைமுறைகளின் ஊடாக உள்ளுர் சமுதாயங்கள் மற்றும் வியாபாரங்களை உயர்த்தும் துடிப்பான குவிமையத்துடனான சுற்றுச்சூழல், சமூக, மற்றும் ஆட்சி கோட்பாடுகள் SDB வங்கியின் நெறிமுறைகளில் ஆழப்பதிந்துள்ளன. வங்கியானது இலங்கையை புதிய உயரங்களிற்கு இட்டுச்செல்வதனை நோக்கமாகக்கொண்டு, பெண்களின் வலுப்படுத்தல், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் எண்ணிய உள்ளடக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.