Jul 23, 2025 - 03:46 PM -
0
இலங்கை, ஐரோப்பிய ஒன்றிய தேசிய கலாசார நிறுவகங்கள் (EUNIC) மற்றும் Good Life X ஆகியன இணைந்து முன்னெடுக்கும் “நாம் முன்னெடுக்கும் பாதைகள்” எனும் திட்டத்தை கொழும்புக்கு அப்பாலான பகுதிகளிலும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அதனூடாக, இலங்கையின் பிராந்திய சமூகங்களின் மத்தியில் நிலைபேறாண்மையை மையமாகக் கொண்ட புத்தாக்க நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நான்கு பகுதி நிகழ்வுகளின் முதலாவது கட்டம் கண்டி, கரலிய மாநாட்டு நிலையம் மற்றும் இயல் கலை நிலையத்தில் ஜுலை 25-26 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்த பயணத் திட்டத்திமானது, சூழல்சார் விழிப்புணர்வூட்டல் மற்றும் மீளுருவாக்க சிந்தனை ஆகியவற்றை புத்தாக்க கலைகளினூடாக ஏற்படுத்துவதையும், கலாசார தொடர்புகளை மையமற்ற முறையில் அனைவருக்கும் எட்டக்கூடியதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
டிஜிட்டல் புத்தாக்க பசுமை வரைபடம் மற்றும் கண்காட்சியுடன் 2024 ஆம் ஆண்டில் கொழும்பில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டம், இவ்வருடம் நான்கு பிரதான பிராந்தியங்களான கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் காலி ஆகிய பகுதிகளுக்கு ஜுலை முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் விரிவாக்கப்படவுள்ளது. இந்த மாற்றம்,இலங்கையில் நிலைத்த தன்மையை நோக்கி பயணிக்கும், அடித்தள புத்தாக்க வலையமைப்புகளை உறுதிப்படுத்தவும், பிராந்தியக் குரல்களை முன்னிலைப்படுத்தவும், ஈயூனிக் (EUNIC) மற்றும் உள்ளூர் பங்காளர்கள் எடுத்துக்கொள்ளும் வளர்ந்து வரும் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. உள்நாட்டின் நடைமுறைப்படுத்தல் பங்காளரான Good Life X, பல்செயற்பாட்டு திரண்ட முன்னெடுப்பான Rhizome உடன் கைகோர்த்து, கண்டி பிராந்திய அமர்வை முன்னெடுக்கவுள்ளது. இதில் பியோண்ட் ரிசோம்: கலை ஆராய்ச்சி (Beyond Rhizome : Artistic Exploration)- சமூக பங்கெடுப்பு, உரையாடல் மற்றும் புதிய முயற்சிகளை அடிப்படையாகக் கொண்ட, ஊக்கமளிக்கும் பொதுநிகழ்வுகளைக் கொண்ட இரண்டு நாள் நிகழ்ச்சித் திட்டத்தை வழங்கவுள்ளது.
2025 ஆம் ஆண்டின் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் GLX இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் செயற்திட்ட பணிப்பாளருமான எம்மா டிசில்வா கருத்துத் தெரிவிக்கையில், “இந்த ஆண்டின் தொடர் பிராந்திய நிகழ்வுகளில், ஒழுங்கமைக்கப்பட்ட கண்காட்சிகள், திறமைவெளிப்பாடுகள் மற்றும் திறன் கட்டியெழுப்பல் பயிற்சிப்பட்டறைகள் போன்றன முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அவற்றில் புத்தாக்க செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சூழல் சவால்களில் எவ்வாறு கலாசார மற்றும் சமூக அடிப்படையில் முன்னெடுக்கப்படும் புத்தாக்க நடவடிக்கைகள் செயலாற்றும் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்” எனக் குறிப்பிடுகிறார். 2025 ஆம் ஆண்டில், நாம் முன்னெடுக்கும் பாதைகள் திட்டம் நான்கு பிராந்தியங்களை பின்வரும் திகதிகளில் சென்றடையவுள்ளது. கண்டியில் (ஜுலை 25-26), யாழ்ப்பாணம் (ஆகஸ்ட் 29-30), மட்டக்களப்பு (செப்டெம்பர் 12-13) மற்றும் காலி (ஒக்டோபர்). Movement Rhizome நிகழ்வின் அழைப்பாளரான தாரக குணசேகர குறிப்பிடுகையில், “ நாம் முன்னெடுக்கும் பாதைகள் மற்றும் Movement Rhizome இணைந்து, குறுக்கு கலாசார கலந்துரையாடலை ஏற்படுத்தி, பரீட்சார்த்த உணர்வு வெளிப்பாடு மற்றும் சமூகமட்டத்தில் ஆழமான மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கிறோம். சூழல் மற்றும் புத்தாக்க தொழிற்துறைகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்களை இணைந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்!” என்றார்.
ஜுலை 25-26 ம் திகதி, வார இறுதியில் முன்னெடுக்கப்படும் ஈடுபாடுகளில், இரு நாள் பொது மக்கள் கண்காட்சி அடங்கியிருக்கும். அதில் நிலைபேறான புத்தாக்க செயற்பாடுகள், கலைஞர்களுக்கான திறன் கட்டியெழுப்பல் பயிற்சிப் பட்டறைகள், ஒழுங்கமைக்கப்பட்ட திறன் வெளிப்படுத்தல்கள் மற்றும் பரீட்சார்த்த அமர்வுகள் போன்றன அடங்கியிருக்கும். அத்துடன், பிரதிபலிப்பு, கைகோர்ப்பு மற்றும் கருத்தளிப்புக்கான திறந்த அமர்வுகள் மற்றும் இலங்கையின் புத்தாக்கமான பசுமை வரைபடத்தில் இணைவதற்கான வழிகாட்டல் – மற்றும் உள்நாட்டு மற்றும் பிராந்திய தோற்றப்பாட்டை எய்துதல் போன்றனவும் ஏற்படுத்தப்படும்.