Jul 24, 2025 - 09:58 AM -
0
தமிழ்நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 6 மாநிலங்களவை எம்.பி.க்கள் நாளை (25) பதவியேற்க உள்ளனர். தி.மு.க. சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், அ.தி.மு.க. சார்பில் தனபால், இன்பதுரை, மக்கள் நீதி மயயம் சார்பில் கமல்ஹாசன் ஆகியோர் நாளை பதவியேற்க உள்ளனர்.
மாநிலங்களவை எம்.பி.யாக நாளை பதவியேற்க உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று (24) டெல்லி புறப்பட்டு சென்றார்.
இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்ட கடமையை செய்ய உள்ளேன். பெருமையோடு இன்று டெல்லி செல்கிறேன். பாராளுமன்றத்தில் கன்னிப்பேச்சு குறித்து இப்போது சொல்ல முடியாது. உங்கள் வாழ்த்துகள், மக்கள் வாழ்த்துகளுடன் டெல்லி சென்று உறுதிமொழி ஏற்க உள்ளேன் என்றார்.