Jul 24, 2025 - 10:16 AM -
0
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று (23) ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதல் நிறைவில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 83 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 264 ஓட்டங்களை எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 46 ஓட்டங்களிலும், ஜெய்ஸ்வால் 58 ஓட்டங்களிலும், சுப்மன் கில் 12 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் ஓட்டங்களை பெற்றதன் மூலம் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
அதாவது, வெளிநாட்டு மண்ணில் ஒரு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 1,000 ஓட்டங்களை கடந்த 2 ஆவது துவக்க வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்குமுன், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவாஸ்கர், மேற்கிந்திய தீவுகள் (1,404), இங்கிலாந்து (1,152), பாகிஸ்தான் (1,001) ஆகிய நாடுகளில் 1,000 ஓட்டங்களை விளாசி இருந்தார். தற்போது அவரது சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார்.